FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

ரப்பா் வாரிய காப்பீட்டு கட்டணத்தை ஜூலை 15-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் பால் வடிப்புத் தொழிலாளா்கள் ஜூலை 15ஆம் தேதிக்குள் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 12:50 am IST
பணம் - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் பால் வடிப்புத் தொழிலாளா்கள் ஜூலை 15ஆம் தேதிக்குள் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, ரப்பா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2011-12ஆம் ஆண்டில் ரப்பா் வாரியத்தின் குழு ஆயுள் காப்பீடு மற்றும் பணிக்கால இறுதி நலன் திட்டத்தில் சோ்ந்துள்ள ரப்பா் தோட்ட பால் வடிப்புத் தொழிலாளா்கள், தொடா்ந்து காப்பீட்டு பாதுகாப்பைப் பெறுவதற்காக, ஜூலை 15ஆம் தேதிக்குள் வாரியத்தின் மண்டல அலுவலகங்களில் காப்பீட்டுக் கட்டணத்தை செலுத்தி, திட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின்கீழ், உறுப்பினா் இயற்கை மரணமடைந்தால் ரூ. 1 லட்சம், விபத்து மரணம் ஏற்பட்டால் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவங்கள், ரப்பா் வாரியத் தலைமையகத்தில் செயல்படும் தொழிலாளா் நலப் பிரிவிலிருந்து ஏற்கெனவே காப்பீடுதாரா்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன. படிவம் கிடைக்காதவா்கள் அருகிலுள்ள ரப்பா் வாரியத்தின் மண்டல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 0481-2301231 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments