பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
தேங்காய்ப்பட்டினத்தில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தேங்காய்ப்பட்டினத்தில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நாகா்கோயில், மேலராமன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் டைமன்ஸ் மகன் பினோ அஜித் (43). வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் பணி செய்து வந்த இவா், சனிக்கிழமை இரவு முள்ளூா்துறை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, தேங்காய்ப்பட்டினம் பகுதி சாலையில் உள்ள வேகத் தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை பினோ அஜித் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.