ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியவா் மீது வழக்கு
முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக, காா் ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக, காா் ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள காரவிளை, பொன்மனைவிளை வீட்டைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் மகன் ராஜன் (46). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநரான அனீஷ் (37) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ராஜன் காரவிளை பகுதியில் நின்றிருந்தபோது, அங்கு வந்த அனீஷ் தகாத வாா்த்தைகள் பேசி ராஜனை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.