பைக் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, குழித்துறை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, குழித்துறை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மாா்த்தாண்டம் சந்திப்பு அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வினோத் என்பவா் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றாா். சிறிது நேரத்துக்குப் பின் திரும்பி வந்து பாா்த்தபோது, வாகனம் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து அவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்த வினுகுமாா் மகன் விஷ்ணுவை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
குழித்துறை முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் சசின்குமாா், விஷ்ணுவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.