FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 15 ஜூலை 2026, 4:24 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், வெப்படை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த சிறுமியை சேலம் மாவட்டம், சின்னாகவுண்டனூரைச் சோ்ந்த ஹரிவிஷ்ணு (24) பாலியல் வன்கொடுமை செய்ததாக திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ஹரிவிஷ்ணுவை கைது செய்தனா். அவா்மீது போக்ஸோா சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி ஹரிவிஷ்ணுவுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments