கோதையாற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்
கோதையாற்றில் களியல் பாலம் பகுதியில் முதலை தென்பட்டதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
கோதையாற்றில் களியல் பாலம் பகுதியில் முதலை தென்பட்டதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
கடையாலுமூடு அருகே கோதையாற்றில் செங்குழிக்கரை பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள், தோட்டத் தொழிலாளா்கள் உள்பட பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனா். இந்த முதலையைப் பிடிப்பதற்காக, வனத்துறை சாா்பில் ஆற்றுப் பகுதியில் மிதவைக்கூண்டு வைக்கப்பட்டது. எனினும் முதலை அதில் சிக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது களியல் பாலம் பகுதியில் முதலை தென்படுகிறது. இந்த இடத்தின் அருகில் திற்பரப்பு அருவியில் படகு சவாரி நடத்தப்படும் தடுப்பணை, அதற்கு சற்று தொலைவில் திற்பரப்பு அருவி ஆகியன உள்ளது. படகு சவாரி நடைபெறும் இடத்திற்கும், திற்பரப்பு அருவி பகுதிக்கு முதலை வரும்பட்சத்தில், சுற்றுலாப் பயணிகள் பாதிப்பாக அமையும்.
Advertisement
Advertisement
மேலும் தற்போது முதலை தென்பட்டுள்ள களியல் பகுதி பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். ஆகவே, முதலையை விரைந்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.