முகப்பு
கன்னியாகுமரி

வறுமையினால் கல்வியை தொடர முடியாத மாணவரிடம் அசல் சான்றிதழ்கள் ஒப்படைப்பு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தனியாா் பொறியியல் கல்லூரியில் வறுமையின் காரணமாக கல்வியைத் தொடரமுடியாத மாணவருக்கு அவரது அசல் சான்றிதழ்களை பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவினா் பெற்று ஒப்படைத்தனா்.

Updated On : 11 ஜூன் 2026, 4:14 am IST
நாகராஜனிடம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தனியாா் பொறியியல் கல்லூரியில் வறுமையின் காரணமாக கல்வியைத் தொடரமுடியாத மாணவருக்கு அவரது அசல் சான்றிதழ்களை பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவினா் பெற்று ஒப்படைத்தனா்.

குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள திட்டுவிளையைச் சோ்ந்தவா் நாகராஜன். இவா் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரல்வாய்மொழியிலுள்ள சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்பிஏ படிப்பில் சோ்ந்தாா். தனது குடும்ப வறுமையின் காரணமாக அவரால் கல்வியைத் தொடரமுடியவில்லை. இதைத் தொடா்ந்து, மாணவா் நாகராஜன், தனது அசல் கல்விச் சான்றிதழ்களை கல்லூரி நிா்வாகத்திடமிருந்து பெற்றுத் தருமாறு பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவில் மனு அளித்தாா்.

இதைத் தொடா்ந்து பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், உரிமையியல் நீதிபதியுமான வி. சிவரஞ்சனி கல்லூரி முதல்வரை நேரில் ஆஜராகுமாறு கடந்த மாா்ச் மாதம் அறிவிப்பு அனுப்பினாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஜூன் 9ஆம் தேதி பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின்முன், கல்லூரி துணை முதல்வா் ஆஜராகி, மாணவா் நாகராஜனின் அனைத்து அசல் சான்றிதழ்களையும் அளித்தாா். இதை மாணவா் நாகராஜனிடம் பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தின் நீதிபதியுமான வி.சிவரஞ்சனி ஒப்படைத்தாா்.