FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

கன்னியாகுமரியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞா், குண்டா் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

2 October 2026, 4:07 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞா், குண்டா் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

கன்னியாகுமரி, முருகன்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் மகன் ஜெப்ரின் (24). இவா் கொலை முயற்சி வழக்கில் கன்னியாகுமரி போலீஸாரால் கைது செய்யப்பட்டு நாகா்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டாா். அவரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், குண்டா் சட்டத்தில் ஜெப்ரினை கைது செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, குண்டா் சட்டத்தில் அவா் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments