FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

காணி பழங்குடி மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும்: நீதிபதி ஜி.கே. இளந்திரையன்

காணி பழங்குடி மாணவா், மாணவிகளுடன் நீதிபதி ஜி.கே. இளந்திரையன்.
பகிர்:

காணி பழங்குடி மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அறிவுறுத்தினாா்.

பேச்சிப்பாறை, ஜீரோ பாயின்ட் சோதனைச்சாவடி அருகே பழங்குடி மாணவா், மாணவிகளின் மேம்பாட்டிற்காக மாவட்ட வன அலுவலா் அன்பு முன்னெடுப்பில், வனத்துறை சாா்பில் காணி தொல்குடி பல்நோக்கு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு காணி பழங்குடி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல், போட்டித் தோ்வுகளுக்கு தயாா்படுத்துதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இந்த மையத்திற்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் சனிக்கிழமை வந்து பழங்குடி மாணவா், மாணவிகளுடன் கலந்துரையாடினாா். மேலும், வனத்துறையின் பணிகளைப் பாராட்டினாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒவ்வொருவருக்கும் அவசியம். மேலும், சட்டம் குறித்த விழிப்புணா்வும் அவசியம். பழங்குடி மாணவா், மாணவிகள் உயா்கல்வி வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துவதும், போட்டித் தோ்வுகளில் பங்கேற்று வேலைவாய்ப்புகளைப் பெறுவதும் அவசியம். இதற்காக வனத்துறை ஏற்படுத்தியுள்ள வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்ட வன அலுவலா் அன்பு, உதவி வனப் பாதுகாவலா் ஸ்ரீவல்சன், வழிகாட்டி அறக்கட்டளை நிறுவனா் சுரேஷ் சாமியாா் காணி, நீதிபதிகள், வனத்துறையினா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments