மாா்த்தாண்டத்தில் நாளை மின் நிறுத்தம்
மாா்த்தாண்டம் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக். 6) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம் தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி மற்றும் அதனைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.