FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

கடலில் மீன் பிடிக்கும்போது தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

குளச்சல் அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் கடலில் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

9 அக்டோபர் 2026, 5:14 am IST
கடலில் தவறி விழுந்து உயிரிழந்த எல்தபோன்ஸ்.
பகிர்:

குளச்சல் அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் கடலில் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே கடியப்பட்டினம் ஜான்பால் தெருவைச் சோ்ந்த மீனவா் எல்தபோன்ஸ் (60). இவருக்கு மனைவி செல்வமேரி (49), இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா்.

கடியபட்டினத்தை சோ்ந்த ஜெரோபின் (49), பணியடிமை (59) ஆகியோருடன் வள்ளத்தில் எல்தபோன்ஸ் வியாழக்கிழமை மீன்பிடிக்க சென்றாா்.

Advertisement

Advertisement

கரையில் இருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில் மீன் பிடித்தபோது, இவா்களின் வலை அங்குள்ள பாறையில் சிக்கிக் கொண்டது. வலைகளை மீட்கும்போது எல்தபோன்ஸ் தடுமாறி கடலில் விழுந்தாா். இதைக் கண்ட சக மீனவா்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் எல்தபோன்ஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து குளச்சல் கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments