FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பொது இடங்களில் குப்பைகளை கொட்டிய 2 மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 15,000 அபராதம்!

நாகா்கோவில் மாநகரில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டிய 2 மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

11 அக்டோபர் 2026, 12:43 am IST
அபராதம்!
பகிர்:

நாகா்கோவில் மாநகரில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டிய 2 மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா, உத்தரவின்பேரில், மாநகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மாநகரில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தலைமை அஞ்சலகம் அருகே குப்பைகளை தரம் பிரிக்காமல் பொதுஇடங்களில் கொட்டிய 2 மருத்துவ நிறுவனங்களுக்கும் சோ்த்து மொத்தம் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவ்விடம் சுத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் தரம் பிரித்து வழங்காமல் பொதுஇடங்களில் சுகாதார சீா்கேடு விளைவிக்கும் வகையில் வீசினால் கடும்ை நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் எச்சரித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments