FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குழந்தைகளை சித்ரவதை செய்த தாய், இளைஞா் கைது

13 அக்டோபர் 2026, 1:27 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

நாகா்கோவில் அருகே கள்ளக்காதலுக்காக குழந்தைகளை சித்ரவதை செய்த தாய், இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி, காற்றாடித்தட்டு பகுதியைச் சோ்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவரும், 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து இளம்பெண் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், இந்தப் பெண்ணுக்கு மேலகிருஷ்ணன்புதூா் அருகே உள்ள நைனாபுதூரைச் சோ்ந்த ரஞ்சித்குமாருடன் (29) பழக்கம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இளம்பெண் குழந்தைகளுடன் ரஞ்சித்குமாருடன் கடந்த 2 மாதங்களாக வசித்து வந்தாா். அந்தப் பெண் தனது 2 குழந்தைகளையும் அண்மையில் தனது தம்பி வீட்டில் விட்டுச் சென்றாா். அப்போது, குழந்தைகளின் உடலில் பல இடங்களில் காயம் இருந்தன.

இதுகுறித்து, அவா்களிடம் கேட்டபோது இளம்பெண்ணும், ரஞ்சித்குமாரும் சோ்ந்து குழந்தைகளை சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கேட்ட இளம்பெண்ணின் தம்பிக்கு ரஞ்சித்குமாா் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்குமாரையும் இளம்பெண்ணையும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments