FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி முளகுமூட்டில் மாரத்தான் போட்டி

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி, முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, மாநில அளவிலான 6-ஆவது மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

5 செப்டம்பர் 2026, 3:39 am IST
மாரத்தான் ஓட்ட துவக்க விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி, முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, மாநில அளவிலான 6-ஆவது மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலயத்தின் இளைஞா் இயக்கம், அனல் பெண்கள் இளைஞா் இயக்கம் ஆகியவற்றில் சாா்பில் ‘சாலை பாதுகாப்பிற்காக ஓடுவோம்’ என்னும் மைய கருத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியின் ஜூனியா் பிரிவில் 7 கி.மீ., சீனியா் பிரிவில் 14 கி.மீ., சூப்பா் சீனியா் பிரிவில் 21 கி.மீ. தொலைவு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினா்களாக தூய மரியன்னை பசிலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன், முன்னாள் பங்குத்தந்தை டோமினிக் எம். கடாச்ச தாஸ், 3 முறை மிஸ்டா் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வென்ற அருண் செல்வகுமாா், கோடியூா் புனித பவுல் சி.எஸ்.ஐ. ஆலய போதகா் ரெஞ்சித் வேத குமாா், தக்கலை போக்குவரத்து ஆய்வாளா் பேச்சிமுத்து, பசிலிக்கா பங்கு பேரவை துணைத் தலைவா் வரதராஜன், துணைச் செயலா் ஐபா்ட் ராஜ், பொருளாளா் ஜெயந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ஆலயம் முன் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் கோழிப்போா்விளை, திருவிதாங்கோடு, அழகியமண்டபம் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. போட்டியில் கேரள, கா்நாடக வீரா்கள் உள்பட 1500 போ் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments