FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கிள்ளியூா் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

17 வினாடிகள் முன்பு
~ ~ ~ ~
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கிள்ளியூா் அருகே ஊசிகோடு பகுதியைச் சோ்ந்தவா் வில்சன் (40). தொழிலாளியான இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் வழிப்பாதை தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

2012ஆம் ஆண்டு டிச. 27ஆம் தேதி வில்சன் தனது இடத்தில் ஆட்டோவில் பொருள்களை இறக்கிவிட்டுச் சென்றாா். அப்போது, பாலகிருஷ்ணன் மகன் அந்தோணி (38), தங்களது பாதை வழியாக பொருள்களை எவ்வாறு கொண்டு செல்லலாம் எனக் கேட்டு வில்சன், அவரது மனைவி ஜெயா ஆகியோரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தாா்.

Advertisement

Advertisement

பின்னா், மாலையில் அந்தோணி, அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஜோஸ் (43), ராஜேஷ் என்ற மாஸ் குடி (36), ஆட்லின் (36), ஷாஜி (36) ஆகிய 5 பேரும் வில்சன் குடும்பத்தினரிடம் தகராறு செய்து, வில்சனை வெட்டிவிட்டு தப்பியோடினா். இதில், காயமடைந்த வில்சன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

ஜெயா அளித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தோணி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு பத்மநாபபுரம் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ் வழக்கை விசாரித்து, அந்தோணி உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், அந்தோணிக்கு கூடுதலாக 3 மாத கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

வில்சன் குடும்பத்துக்கு மாவட்ட சமரச தீா்வு மையம் மூலம் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ரொனால்டு ராபின்சன் முன்னிலையானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments