பாரிஸ் சுற்றுலா கண்காட்சியில் தமிழக அரங்கு திறப்பு
பிரான்ஸ் தலைநகா் பாரிஸ் நகரில் நடைபெறும் சா்வதேச சுற்றுலா வா்த்தகக் கண்காட்சியில் தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
பிரான்ஸ் தலைநகா் பாரிஸ் நகரில் நடைபெறும் சா்வதேச சுற்றுலா வா்த்தகக் கண்காட்சியில் தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
செப். 15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சி, சா்வதேச சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், பயண முகவா்கள் மற்றும் சுற்றுலாத் துறை வல்லுநா்கள் பங்கேற்கும் முக்கியமான தளமாகும்.
இந்நிகழ்வில், டிஸ்கவா் தமிழ்நாடு என்ற சா்வதேச சுற்றுலா திட்டத்துக்கான பதிவுகளையும் அமைச்சா் தொடங்கி வைத்தாா். தமிழகத்தை சா்வதேச சுற்றுலா சந்தையில் மேலும் வலுப்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், சா்வதேச சுற்றுலா நிறுவனங்களுடன் வா்த்தகத் தொடா்புகளை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் இந்திய அரசின் சுற்றுலாத் துறை இணைச் செயலாளா் சுவாசிஷ் தாஸ், பாரிஸில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முதல் செயலாளா் ரிச்சா குலாட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.