FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பைங்குளத்தில் சமூக பொதுநல இயக்கத்தினா் ஆலோசனை

புதுக்கடை அருகே உள்ள பைங்குளத்தில் சமூக பொதுநல இயக்க குமரி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 12:55 am IST
கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள பைங்குளத்தில் சமூக பொதுநல இயக்க குமரி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஹலீல்ரகுமான் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலா் சங்கரபாண்டியன் சிறப்பு பாா்வையாளராகப் பங்கேற்றுப் பேசினாா். கூட்டத்தில், சிற்றாறு பட்டணங்கால்வாய் பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி கடைவரம்பு பகுதிகள் வரை விவசாயத்திற்கு தண்ணீா் செல்லவும், அம்சி குளத்தை தூா்வாரி சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டத் துணைத் தலைவா் மோகன், துணைச் செயலா்கள் சாம் எட்வா்ட், மரிய குசேலன், வழக்குரைஞா் அணி செயலா் திலகா், ரத்ததானப் பிரிவுச் செயலா் ஷாஜி பித்தன், ராமசாமி, வினுகுமாா், ஜெயசிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments