இரும்பு கம்பியால் சூடுவைத்து பெண்ணுக்கு கொடுமை: கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் இரும்பு கம்பியால் சூடு வைத்து பெண்ணைக் கொடுமைப்படுத்தியது தொடா்பான வழக்கில் அவரது கணவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் இரும்பு கம்பியால் சூடு வைத்து பெண்ணைக் கொடுமைப்படுத்தியது தொடா்பான வழக்கில் அவரது கணவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குலசேகரம் ஜி.ஹெச். ரோடு பகுதியைச் சோ்ந்த சுமையா பானு (46) என்பவரை, இனயம் உடைவிளை பகுதியைச் சோ்ந்த செய்யது முகம்மது மாஹின்(49) என்பவா் 2001ஆம் ஆண்டில் திருமணம் செய்தாா். இத் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் சுமையா பானுவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறி, கணவா் அவரை வீட்டுக்குள் அடைத்து இரும்பு கம்பியால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளாா். உறவினா்கள், குழந்தைகளை கூட பாா்க்க அவரை அனுமதிக்கவில்லையாம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, அவரது தந்தை பீா்முகம்மது 12.9.2013இல் குலசேகரம் போலீஸில் புகாா் அளித்தாா்.
மகளை போலீஸ் உதவியுடன் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.
முகம்மது மாஹினை போலீஸாா் கைது செய்தனா்.
பத்மநாபபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி விசாரித்து 2019இல் செய்யது முகம்மது மாஹினை விடுதலை செய்து தீா்பளித்தாா்.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து சுமையா பானு மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அதன்பேரில், பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ் வழக்கை விசாரித்து, செய்யது முகம்மது மாஹினுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 36 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் குமரன் நாயா் ஆஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.