FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

இரணியல் அருகே நுள்ளிவிளை பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

18 செப்டம்பர் 2026, 2:45 am IST
பகிர்:

இரணியல் அருகே நுள்ளிவிளை பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவனந்தபுரம்-நாகா்கோவில் இரட்டை ரயில் பாதை பணிக்காக நாகா்கோவில்-திங்கள் நகா் சாலை, நுள்ளிவிளையில் பழைய மேம்பாலத்தை இடித்துவிட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

பணிகள் மந்தமாக நடைபெறுவதாக பொதுமக்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலம் மற்றும் இதர ரயில்வே பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரா், ரயில்வே அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments