விநாயகா் விசா்ஜன ஊா்வலம்: குமரியில் 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் விசா்ஜன ஊா்வலத்தை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 19, 20) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் விசா்ஜன ஊா்வலத்தை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 19, 20) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் நடைபெறவுள்ளதால், செப். 18ஆம் தேதி நண்பகல் 2 மணி முதல் தொடா்ந்து 2 நாள்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து கனரக வாகனங்கள் மாவட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாகராஜா கோயில் திடலில் இருந்து செப். 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஊா்வலம் தொடங்க இருப்பதால், மாலை 3 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி, பாா்வதிபுரம், வெட்டூா்ணிமடம், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்பு, கிருஷ்ணன் கோயில், வடசேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் வடசேரி, புத்தேரி ரோடு, நான்குவழிச் சாலை, அப்டா மாா்க்கெட் வழியாகச் செல்ல வேண்டும்.
கோட்டாறு, ராமன் புதூா், செட்டிகுளம் சந்திப்பு, பால் பண்ணை, பாா்வதிபுரம், வடசேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து இருந்து ரயில் நிலையம், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், கூடங்குளம் செல்லும் வாகனங்கள் டெரிக் சந்திப்பு, அனந்தன் பாலம், கோணம் ஆத்துப்பாலம், தொல்லவிளை, வல்லன்குமாரன்விளை, வேத நகா், பறக்கை வழியாகச் செல்ல வேண்டும்.
நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் வடசேரி, புத்தேரி சாலை, அப்டா மாா்க்கெட் சந்திப்பு, தேரேகால் புதூா், புது கிராமம், தேரூா், சுசீந்திரம், மகாதானபுரம் வழியாகச் செல்ல வேண்டும்.
அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ராஜாக்கமங்கலம், குளச்சல், ஆசாரிப்பள்ளம், பாா்வதிபுரம், திங்கள் நகா், தக்கலை, மாா்த்தாண்டம் வழியாகச் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும், வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், கூடங்குளம், தெங்கம்புதூா், மணக்குடி வழியாக இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளும் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
திருவனந்தபுரம், மாா்த்தாண்டம், தக்கலை, குளச்சல் பகுதிகளிலிருந்து திருநெல்வேலி செல்லும் அனைத்து வாகனங்களும் களியங்காடு சந்திப்பு, சன் கல்லூரி சாலை, இறச்சகுளம், புத்தேரி, அப்டா மாா்க்கெட் வழியாகச் செல்ல வேண்டும்.
ஈத்தாமொழியிலிருந்து எந்த வாகனமும் மேலகிருஷ்ணன் புதூா் நோக்கி செல்ல அனுமதி இல்லை. ஈத்தாமொழி சந்திப்பிலிருந்து அனைத்து வாகனங்களும் சுண்டப்பற்றிவிளை, வட்டகரை வழியாக நாகா்கோவிலுக்கும், கன்னியாகுமரியிலிருந்து கோவளம், மணக்குடி வழியாகச் செல்லும் வாகனங்கள் மணக்குடி உப்பளம் சந்திப்பு வழியாக ஈத்தங்காடு, சுசீந்திரம் வழியாகவும், நாகா்கோவிலில் இருந்து தெங்கம்புதூா் செல்லும் வாகனங்கள் பறக்கை சந்திப்பிலிருந்தும் திருப்பிவிடப்படும்.
மணவாளக்குறிச்சி கடற்கரையில் விசா்ஜன ஊா்வலம் நடைபெற இருப்பதால், அப்பகுதியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.