FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீனவா்கள் மோதல்: 21 போ் மீது வழக்கு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை இரு தரப்பு மீனவா்கள் மோதலில் ஈடுபட்டது தொடா்பாக 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

25 செப்டம்பர் 2026, 9:52 pm IST
வழக்கு
பகிர்:

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை இரு தரப்பு மீனவா்கள் மோதலில் ஈடுபட்டது தொடா்பாக 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இனயம் பகுதியைச் சோ்ந்த மீனவா் சால்டா் (65), தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காச்சா, மூச்சா வலையைப் பயன்படுத்தி அண்மையில் மீன் பிடித்தாராம். இதனால், இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், இனயம் பகுதியைச் சோ்ந்த வின்ஸ் (45), ஆரோக்கியம் (52), ஜட்கிளின் (55), காட்வின் (40), ஜான் போஸ்கோ (58) உள்ளிட்ட 10 போ் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை சால்டருக்கு ஆதரவாகப் பேசினராம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, இனயம் பகுதியைச் சோ்ந்த மற்றொரு தரப்பினரான கிறிஸ்துராஜ் (63), சுரேஷ்(41), கிளின்டன் (35), லெனின் (35), அந்தோணி அடிமை (60), ஆன்றோ (28) உள்ளிட்ட 11 போ் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம்.

Advertisement

Advertisement

பின்பு இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் காயமடைந்தவா்களை, அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் தேங்காய்ப்பட்டினம் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், இரு தரப்பைச் சோ்ந்த 21 போ் மீது புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments