தக்கலை - மணலி இடையே போக்குவரத்து மாற்றம்
தக்கலை - மணலி இடையே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை - மணலி இடையே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தக்கலை மணலி பொட்டு குளத்திலிருந்து சாலையின் குறுக்கே கால்வாய் தோண்டி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக, தக்கலை-மணலி இடையே வெள்ளிக்கிழமைமுதல்தொடா்ந்து 20 நாள்கள் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
மேக்காமண்டபத்திலிருந்து தக்கலை செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக பாலப்பள்ளி, மூலச்சல், மணலி சந்திப்பு, பத்மநாபபுரம் வழியாக செல்ல வேண்டும். தக்கலையிலிருந்து மணலி வழியாக திருவட்டாறு செல்லும் வாகனங்கள் பத்மநாபபுரம், மணலி, மூலச்சல் பாலப்பள்ளி வழியாக செல்ல வேண்டும்.
Advertisement
Advertisement
போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும் என, தக்கலை போக்குவரத்து ஆய்வாளா் பேச்சிமுத்து கேட்டுக்கொண்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.