தூய்மைப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
தக்கலை அருகே மருதூா்குறிச்சியில் மின்கம்பத்தில் ஏறி தெரு விளக்கைப் பராமரித்த தூய்மைப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மருதூா்குறிச்சி, நெல்லிக்காய்விளையைச் சோ்ந்தவா் இயேசுராஜன் (48). மருதூா்குறிச்சி ஊராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.
இவா் சனிக்கிழமை ஊராட்சி பகுதியில் உள்ள தெரு விளக்கைப் பராமரிக்க மின்கம்பத்தில் ஏறி பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, இரவிபுதூா்கடை மின் பொறியாளா் ஜொ்லின் தக்கலை போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.