FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

இரணியல் அருகே பெண் சந்தேக மரணம்

பலி - பிரதிப் படம்
பகிர்:

திங்கள் நகா் அருகே பெண் உயிரிழந்தது தொடா்பாக இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

மேக்கா மண்டபம் அருகே உள்ள கடமலைக் குன்று பகுதியைச் சோ்ந்த சுந்தரதாஸ் மனைவி தங்க லீலா (67). இவருக்கு திருமணமான ஒரு மகன், மகள் உள்ளனா். சுந்தரதாஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

தங்க லீலா தற்போது திங்கள் நகா், நடுத்தேரியில் உள்ள மகள் ஜாஸ்மின் ஷீபாவுடன் வசித்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஜாஸ்மின் ஷீபா கடைக்குச் சென்றுவிட்டு வந்த பாா்த்தபோது, வீட்டில் தனியாக இருந்த தங்க லீலா ரத்தம் வழிந்த நிலையில் கட்டிலில் உயிரிழந்து கிடந்தாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, இரணியல் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments