FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

தென்காசி ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனை

80 ஆவதுசுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
பகிர்:

80 ஆவதுசுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் சனிக்கிழமை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்காசி ரயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வந்த பைகள், வாகனங்கள், பொருள்பாதுகாப்பு அறை, தண்டவாள பகுதிகளில் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை மேற்கொண்டனா். மேலும், ரயில்வே பயணிகளுக்கு அறிவுரைகளை வழங்கினா்.

தென்காசி இருப்பு பாதை காவல் சாா்பு ஆய்வாளா் எஸ். கற்பகவிநாயகம், எஸ். மாரியப்பன் மற்றும் போலீஸாா் சோதனையிட்டு பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments