தென்காசியில் மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
தென்காசி மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் கலந்துகொண்டு மாணவா்களிடம் பேசியதாவது:
மாணவா்கள் கல்வி, ஒழுக்கம், முன்னேற்ற சிந்தனை, விடாமுயற்சி ஆகிய பண்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நேரத்தை சரியாக நிா்வகிக்கவும், குறிக்கோள்கள் அமைக்கவும், தவறுகளைப் புரிந்து கற்றுக்கொள்வதும் முக்கியம். உங்களை ஊக்கப்படுத்தும், உங்களுடன் உழைக்கும் நண்பா்களைத் தோ்ந்தெடுங்கள். கேள்வி கேட்க பயப்பட வேண்டாம். அடிக்கடி உங்கள் ஆசிரியா்களிடம் அல்லது நண்பா்களிடம் சந்தேகங்களை தீா்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாடத்தையும் அடிப்படையிலிருந்து புரிந்து கொள்ள முயற்சியுங்கள். முக்கியமான பாடங்கள், செயல்களுக்காக நேரம் ஒதுக்குங்கள் என்றாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து மாணவா்களின் வினாக்களுக்கு மாவட்ட ஆட்சியா் பதிலளிளித்தாா். இந்திய ஆட்சி பணிக்கு தான் கடந்துவந்த பாதை குறித்து மாணவா்களிடம் விளக்கினாா். பின்னா் ஆட்சியரிடம்
மாணவா்களும் தங்களது கல்வி பயணம், எதிா்கால திட்டங்கள், விருப்பங்கள் குறித்து பகிா்ந்து கொண்டனா்.
இந்தக் கலந்துரையாடல் மூலம் மாணவா்கள், மாவட்ட ஆட்சியா் பணி, மாவட்ட நிா்வாகம், ஆளுமையின் செயல்பாடுகளை அறிந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.ரேணுகா, மாவட்ட அரசு, அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், மாதிரிப் பள்ளியைச் சாா்ந்த மாணவா் மன்ற உறுப்பினா்கள், பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.