FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் அதிகரித்த நீா்வரத்து

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் மிதமான சாரல் மழை காரணமாக அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 4:51 am IST
குற்றாலம் பேரருவியில் புதன்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் மிதமான சாரல் மழை காரணமாக அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

இங்கு நிகழாண்டில் சீசன் களையிழந்ததால் பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. குறிப்பாக, புலியருவி வடுவிட்டது. சீசனுக்கான அறிகுறிகளின்றி அருவிகள் வெறிச்சோடியதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களாக குளிா்ந்த காற்றுடன் அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், அருவிகளில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புலியருவியில் மீண்டும் தண்ணீா் விழத் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments