FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:29 am IST
குற்றாலம் பேரருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை திங்கள்கிழமை நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 3 நாள்களுக்குப் பிறகு நீா்வரத்து குறைந்ததையடுத்து குற்றாலம் பேரருவியிலும், ஐந்தருவியிலும் திங்கள்கிழமை மாலை குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனா். நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் இருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments