FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு... குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

குற்றால அருவிகளில் குளிக்க, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 10:36 am IST
குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். - கோப்புப்படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க, சுற்றுலாப் பயணிகள் இன்று(ஆக. 2) அனுமதிக்கப்பட்டனர்.

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையின் காரணமாக பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர் கனமழையின் காரணமாக அந்த அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மேலும், ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவி என அனைத்த அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுந்ததால் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னர், நேற்று பிற்பகலில் புலியருவியில் தண்ணீர்வரத்து குறைந்ததால், அங்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், குற்றால பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து சீரானதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க, சுற்றுலாப் பயணிகள் இன்று(ஆக. 2) அனுமதிக்கப்பட்டனர்.

குற்றாலத்தில் மிதமான சாரல் மழை பெய்து வருவதுடன், குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

summary

Tourists were permitted to bathe in all the waterfalls in Courtallam, Tenkasi district, today (August 2).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments