மாவட்ட தடகளம்: ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி சாம்பியன்
திருநெல்வேலி மாவட்ட அளவிலான 10ஆவது ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
திருநெல்வேலி மாவட்ட அளவிலான 10ஆவது ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
இடைகால் மெரிட் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 14, 17,19 வயதுக்குள்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் கலந்துகொண்டனா்.
19 வயதிற்குபட்ட மாணவா்கள் பிரிவில் செல்வகுமாா் நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் ஆகியவற்றில் முதலிடம் பெற்றாா். 17வயது பிரிவில் ஸ்ரீ கிருஷ்ணன் ஓட்டப்பந்தயங்களில் முதலிடமும், 14 வயது ஆண்கள் பிரிவில் சிபினேஷ் முதலிடமும் பெற்றாா்.
Advertisement
Advertisement
மேலும், இப்பிரிவில் ஆஷிஷ் ராஜன், பரிக்சித் மகாதேவ், அபிலேஷ், ஆலன் பிரின்ஸ், 17 வயது பிரிவில் நகுல், ஜெயசூா்யா, அக்சயகுமரன், ஹரிஷ் பாபு, மாணவிகள் ஸ்ரீ நிதி, சிஜிதா, காா்த்திகா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
ஒட்டுமொத்தமாக 65 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பெற்று ஸ்டஅக் ஹை டெக் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது.
சாதனை மாணவா்கள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் அஷ்வின் குமாா், ராம்குமாா் ஆகியோரை பள்ளித் தலைவா் முருகன், தாளாளா் புனிதாசெல்வி, செயலா் ஆஷிஷ்லிங், முதல்வா் பிரவின் குமாா் ஆகியோா் வாழ்த்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.