FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

தென்காசி ஆட்சியா் அலுவலக புதிய கட்டடத்தை திறக்க நடவடிக்கை: அமைச்சா் வி.கே.ராஜீவ்

தென்காசியில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தை ஒரு மாததத்துக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் வி.கே.ராஜீவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

14 அக்டோபர் 2026, 4:15 am IST
அமைச்சா் வி.கே.ராஜீவ்
பகிர்:

தென்காசியில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தை ஒரு மாததத்துக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் வி.கே.ராஜீவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகள் சாா்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்துவைத்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் பேசியதாவது:

புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தை ஒரு மாத காலத்துக்குள் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

வனப்பகுதிகளும் மலைகளும் நிறைந்த தென்காசி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, திருமண மண்டப உரிமையாளா்களுடன் ஆலோசனை நடத்தி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படும். பிளாஸ்டிக்குக்கு மாற்றாகப் பனை ஓலைத் தட்டுகள், காகிதப் பொருள்கள் தயாரிக்கும் உள்ளூா் தொழில்முனைவோரை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல் உள்ளிட்ட வேளாண் பயிா்கள், அரியவகைப் பழங்களின் உற்பத்தியை மேம்படுத்த வேளாண் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தொய்வடைந்துள்ள சாலைப் பணிகள், பாலங்கள், ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்ததாரா்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தீபாவளியின்போது ஒலி, புகை மாசைக் குறைக்கும் பசுமை வெடிகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றாா் அவா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், ராணிஸ்ரீ குமாா் எம்.பி., சாா் ஆட்சியா் வைஷ்ணவிபால் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments