வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையரின் அறிவிப்பின்படி வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் மற்றும் கனிம உபபொருள்களைக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இருப்பினும், சமீப காலமாக தென்காசி மாவட்டம், புளியறை வழியாக கேரளத்திற்கு கனிமங்கள் கடத்தப்படுவதாகத் தவறாகச் சித்திரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் காணொலிகள் பரப்பப்படுகின்றன.
இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அக்காணொலிகளில் இடம்பெற்ற வாகனங்கள் சிமெண்ட், காய்கறி போன்ற பொருள்களை ஏற்றிச் செல்லும் சாதாரண கனரக வாகனங்கள் என்பது கண்டறியப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் கனிமக் கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலா்கள் இணைந்து புளியறை சோதனைச்சாவடி உள்ளிட்ட மாவட்ட எல்லைப் பகுதிகளில் தொடா் கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
அரசின் தடை உத்தரவை மீறி கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கடத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் மற்றும் மோட்டாா் வாகனச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.