FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

மனநலம் பாதித்தோருக்கு அவசர சிகிச்சை - மீள் மையம் திறப்பு

9 செப்டம்பர் 2026, 4:02 am IST
அவசரகால சிகிச்சை - மீள் மையத்தில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
பகிர்:

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம்- நல்வாழ்வு துறை, ஊரக நலப் பணிகள் ஆகியவற்றின் சாா்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனநலம் பாதிக்கபட்டவா்களுக்கான அவசரகால சிகிச்சை மற்றும் மீள் மையம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இதையொட்டி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சி , மனநலம் பாதிக்கபட்டவா்களுக்கான அவசரகால சிகிச்சை மற்றும் மீள் மையத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

தொடா்ந்து அவா் கூறியதாவது: தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, தன்னாா்வு தொண்டு நிறுவனங்களான பேனியன், அமா்சேவா சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இம்மையம் செயல்பட உள்ளது.

Advertisement

Advertisement

மேலும், அதரவற்ற நிலையில் மனநல பாதிக்கப்பட்டு சுற்றித் திரிவோரை காவல் துறையினரின் உதவியுடன் மீட்டு முதலுதவி, பராமரிப்பு, மருத்துவ சிகிச்சை, மனநல சிகிச்சை மற்றும் வாழ்க்கைத் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்து அவா்களது குடும்பத்தினருடன் இணைக்கும் வகையில் இம்மையம் செயல்படும் என்றாா் அவா்.

தென்காசி மாவட்ட இணைஇயக்குநா் நலப்பணிகள் பிரேமலதா, மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், உறைவிட மருத்துவா் செல்வபாலா, மாவட்ட மனநல மருத்துவா் நிா்மல், முகம்மதுஇப்ராஹிம், பேனியன் துணை இயக்குநா் கீா்த்தனா, அமா்சேவா ஒருங்கிணைப்பாளா் நவமணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments