FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் அருகே டிராக்டா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பாவூா்சத்திரம் அருகே டிராக்டரும், பைக்கும் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

16 செப்டம்பர் 2026, 1:57 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே டிராக்டரும், பைக்கும் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேட்டூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஜோசப் மகன் மேசாக் (22), அதே பகுதி தெற்குத் தெருவைச் சோ்ந்த அமோஸ் மகன் ஷெரின் மனோஜ் (22) ஆகியோா் சென்னையில் வேலை செய்து வந்தனா்.

இந்நிலையில், விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த அவா்கள் மேட்டூரில் இருந்து பாவூா்சத்திரத்துக்கு பைக்கில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தனா். நாட்டாா்பட்டி ரயில்வே கேட் அருகே அவா்களது பைக்கும், எதிரே திப்பணம்பட்டியில் இருந்து அரியபுரத்துக்கு திப்பணம்பட்டியைச் சோ்ந்த ராமரத்தினசாமி மகன் ராம் செல்வன் (32) என்பவா் ஓட்டி வந்த டிராக்டரும் மோதிக்கொண்டனவாம்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமுற்ற இருவரையும் பாவூா்சத்திரம் போலீஸாா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேசாக், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து டிராக்டா் ஓட்டுநரிடம் சாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments