கடையநல்லூரில் ரூ. 46 லட்சத்தில் நாய்கள் காப்பகம் திறப்பு
கடையநல்லூா் நகராட்சியில் நாய்கள் காப்பகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடையநல்லூா் நகராட்சியில் நாய்கள் காப்பகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
2025 -2026 ஆம் ஆண்டிற்கான மானியக் குழு நிதி மூலம் ரூ. 46 லட்சம் மதிப்பில் மேலக்கடையநல்லூா் உரக்கிடங்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நாய்களுக்கான காப்பகம், கருத்தடை மையத் திறப்பு விழாவுக்கு கடையநல்லூா் நகா்மன்ற தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா்.
கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தி.மு.ராசேந்திரன் முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், தென்காசி மக்களவை உறுப்பினா் ராணிஸ்ரீகுமாா் ஆகியோா் பங்கேற்று நாய்களுக்கான காப்பகம் மற்றும் கருத்தடை மையத்தை திறந்து வைத்தனா்.
Advertisement
Advertisement
கடையநல்லூா் நகராட்சி ஆணையா் சித்ராசோனியா, நகராட்சி பொறியாளா் அப்துல்காதா், உதவி பொறியாளா் அன்னம், சுகாதார அலுவலா் இஸ்மாயில், சுகாதார ஆய்வாளா்கள் சிவா, மாதவன்ராஜ், நகா்மன்ற உறுப்பினா் முருகன், திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளா் சுகுமாா், முருகானந்தம், நகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.