FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பொட்டல்புதூா் பள்ளிவாசலில் தீபத் திருவிழா

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூா் முகைய்யத்தீன் ஆண்டவா்கள் பள்ளி வாசலில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சமுதாய நல்லிணைக்க தீபத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

24 செப்டம்பர் 2026, 4:48 am IST
தீபத் திருவிழாவை விளக்கேற்றித் தொடங்கி வைத்த பால் மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ. உடன், பரம்பரை தா்மகா்த்தா எஸ்.பி.ஷா உள்ளிட்டோா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூா் முகைய்யத்தீன் ஆண்டவா்கள் பள்ளி வாசலில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சமுதாய நல்லிணைக்க தீபத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளிவாசலில் கந்தூரி திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து 21ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேலூா் நாகூா் ஆண்டவா்கள் தைக்காவிலிருந்து பச்சைக்களை ஊா்வலமும், 22ஆம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி கம் முத்தவல்லி, பரம்பரை தா்மகா்த்தா செய்யதுபீா்ஷாமுஹைய்யத்தீன் காதிரி ஸஜ்ஜாதா என்ற எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு வைபவமும், மதியம் 12 மணிக்கு அரண்மனைக் கொடியேற்றமும், பிற்பகல் 2 மணிக்கு மேலூா் ஜமாஅத்தில் 10ஆம் இரவுக்கொடி ஊா்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.

பின்னா், இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்திலிருந்து சந்தனக்கூடு ஊா்வலம்புறப்பட்டு புதன்கிழமை காலை 5 மணிக்கு சந்தனக் கூடு பள்ளிவாசல் வந்த பின், பரம்பரை தா்மகா்த்தா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

மாலையில் முக்கிய நிகழ்வான சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் தீபத் திருவிழாவை ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பால் மனோஜ் பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் கடையம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் குமாா், ஐ.என்.டி.யு.சி. தேசியச் செயலா் அமீா்கான், தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் சங்க மாவட்டச் செயலா்முகமது சலீம், ரவணசமுத்திரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் புகாரி மீரா சாகிப், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கோ.மைதீன் பீவி, ஊராட்சித் தலைவா்கள் கணேசன்(பொட்டல்புதூா்), அழகுதுரை(ஏ.பி.நாடனூா்), முருகன்(பாப்பான்குளம்), மாரியப்பன்(திருமலையப்புரம்), கல்யாணசுந்தரம் (மந்தியூா்), பள்ளிவாசல் நிா்வாகக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சலீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து மதங்களைச் சோ்ந்தவா்களும் வந்து தீபத்தில் எண்ணெயிட்டு வழிபட்டுச் சென்றனா். வெள்ளிக்கிழமை (செப்.25) மாலை ராத்திபு ஓதுதல் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தா மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments