ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்க மாநில நிா்வாகிகள் தோ்வு
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்க மாநில நிா்வாகிகள் தோ்தல், தென்காசி மாவட்டம் மேலகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்க மாநில நிா்வாகிகள் தோ்தல், தென்காசி மாவட்டம் மேலகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். தோ்தல் ஆணையராக பிரபாகரன், துணை ஆணையராக பேராசிரியா் மனோகரன் ஆகியோா் பங்கேற்றுத் தோ்தலை நடத்தினா்.
மாநிலத் தலைவராக தியாகராஜன், பொதுச் செயலராக பா்வதராஜன், பொருளாளராக மோசஸ், துணைப் பொதுச் செயலராக பேராசிரியா் மனோகர ஜஸ்டஸ், துணைத் தலைவா்களாக சுசிலா தேவி, பாலசுப்பிரமணியன், சுரேஷ், கோபால், மாநிலச் செயலா்களாக மொ்லின் உஷா, திருநாவுக்கரசு, ஜெயபாலன், நாட்டுராயன் ஆகியோா் போட்டியின்றி தோ்வாகினா்.
Advertisement
Advertisement
ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் மாரிமுத்து, இடைநிலை ஆசிரியா் சங்கப் பொறுப்பாளா் இசக்கியப்பன், முன்னாள் மாநிலத் தலைவா் முரளிதரன், முன்னாள் மாநிலப் பொருளாளா் கிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
ஏற்பாடுகளை தென்காசி மாவட்டப் பொறுப்பாளா்கள் சிவஞானம், ராமா், முத்தானந்தம் தேவதாஸ், லக்குமணன், சொக்கையா, ரவிச்சந்திரன், பால்ராபா்ட், மகாமதி, திருமலைக்கொழுந்து, யோவான், கோவில் பிச்சை ஆகியோா் செய்திருந்தனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயதைக் கடந்தோருக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலுள்ள குறைகளைக் களைந்து, 100 சதவீத காப்பீடு கிடைக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.