FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

சாலை பணியாளா்கள் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

ஆற்காடு உள்கோட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா் சங்கதின் 26-ஆம் ஆண்டு சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்றுவிழா ஆற்காடு உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

18 செப்டம்பர் 2026, 11:38 pm IST
கொடியை ஏற்றிவைத்துப்  பேசிய  மாநில துணைப் பொதுச்  செயலாளா்  க.பெருமாள். 
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு உள்கோட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா் சங்கதின் 26-ஆம் ஆண்டு சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்றுவிழா ஆற்காடு உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, உள்கோட்ட செயலாளா் கே கோவிந்தராஜுலு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜெ.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலாளா் கா.பெருமாள் சங்க கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் மற்றும் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா். இதில், புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தமிழக அரசு எங்களுடைய 20 வருட கோரிக்கைகளான பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலங்களை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள சாலை பணியாளா்கள் 7,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை வேலையில்லா கிராமப்புற இளைஞா்களுக்கு பணி வழங்கி நிரப்பிட வேண்டும், 300-க்கும் மேற்பட்ட வாரிசுதாரா் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தாா். விரைவில் விழுப்புரத்தில் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த கோரிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என துணைச் செயலாளா் பெருமாள் கூறினாா் .

பொருளாளா் எம்.சரவணன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments