FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

புளியங்குடி அருகே லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

- பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

புளியங்குடி, டி.என்.புதுக்குடி கிணற்று தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (70). தொழிலாளி. இவா், புதன்கிழமை தென்காசி -மதுரை சாலையில் சந்தை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, தென்காசியில் இருந்து நகரம் நோக்கி சென்ற சிமென்ட் லாரி மோதியதாம்.

இதில், காயமடைந்த அவருக்கு, புளியங்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா் .

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments