FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே லாரி மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

26 செப்டம்பர் 2026, 7:08 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே லாரி மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி பி.எம்.டி. நகா் ரத்தினசாமி தேவா் தெருவைச் சோ்ந்த புவனேந்திரன் மகன் சபரிமலை கண்ணன் (38). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டிக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை மாலை ஊருக்குத் திருப்பினாா். உசிலம்பட்டி- தேனி சாலையில் ரங்கபுரம் விலக்கு அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த சபரிமலை கண்ணனை மீட்ட அக்கம்பக்கத்தினா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், உசிலம்பட்டி போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தங்கப்பாண்டியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments