FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டக்கரம்மாள்புரம் அருகே கடையின் பூட்டை உடைத்து திருட்டு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகே கடையின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகே கடையின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பொன்னாக்குடி அருகேயுள்ள ஆயன்குளத்தைச் சேர்ந்த செபஸ்தியான் மகன் அந்தோனிராஜ்(32). இவர், டக்கரம்மாள்புரம் அருகே தனியார் மகளிர் கல்லூரி எதிர்புறம் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள், டயர் விற்பனை கடை நடத்தி வருகிறார். புதன்கிழமை இரவு கடையை பூட்டி விட்டுச் சென்றாராம். வியாழக்கிழமை காலையில் வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோது நான்கு சக்கர வாகனங்களுக்கான டயர், பிரேக் ஆயில் உள்பட ரூ. 28 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments