FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விபத்தில் மூளைச்சாவு: திசையன்விளை மாணவர் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் விபத்தில் காயமுற்று மூளைச் சாவு அடைந்த மாணவரின் கல்லீரல் உள்ளிட்ட 6 உறுப்புகள் புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் விபத்தில் காயமுற்று மூளைச் சாவு அடைந்த மாணவரின் கல்லீரல் உள்ளிட்ட 6 உறுப்புகள் புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டது.
திசையன்விளையில் இட்டமொழி சாலைப் பகுதியில் வசிக்கும் சேகர் (48)- மாணிக்கவள்ளி (45) தம்பதியின் மகன் கோபி கிருஷ்ணன் (16). அங்குள்ள தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் முதலாமாண்டு பயின்று வந்தார்.
கடந்த 26 ஆம் தேதி திசையன்விளையில் இருந்து உவரிக்கு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கோபி கிருஷ்ணன் விபத்தில் சிக்கினார். பலத்த காயங்களுடன் பாளையங்கோட்டை  குலவணிகர்புரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில், செவ்வாய்க்கிழமை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனை டீன் எஸ்.எம். கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர்  கோபி கிருஷ்ணனை பரிசோதித்து அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதை உறுதி செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள உடல் உறுப்பு மாற்றுக் கழகத்தின் பரிந்துரையின்பேரில், தகுதியான நபர்களுக்கு வழங்க,  மாணவரது உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன. 
இருதயம், நுரையீரல் ஆகியவை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன. கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் உள்ளிட்ட 6 உறுப்புகள் பாதுகாப்பாக கோவை, மதுரை, திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
இது குறித்து மயக்கவியல் நிபுணர் டாக்டர் எஸ். முத்துராஜ் கூறுகையில்,  கோபி கிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 29 ஆம் தேதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. பின்னர், திடீர் பின்னடைவு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments