FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாரதியார் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு மகாகவி பாரதி சிலை வளாகத்தில் பாரதியார் உலகப் பொது மன்றத் தலைவரும்,  கல்வியாளருமான அ. மரியசூசை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  பொதுச் செயலர் கவிஞர்.கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார்.  ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.கணபதியப்பன், அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, பேராசிரியர் உஷாதேவி, பாரதியார் உலகப் பொது மன்ற பொறுப்பாளர்கள் நல்லாசிரியர். நடராஜன், சு.முத்துசாமி, கவிஞர். சக்திவேலாயுதம். சமூக ஆர்வலர்கள் சுந்தரம், சங்கரலிங்கம், ஊர்க்காவல் படை முன்னாள் அதிகாரி சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை பொதுச் செயலர், வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments