FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் விற்பனைக்காக குழந்தை கடத்தல்: 36 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்

பாப்பாக்குடியில் விற்பனைக்காக கடத்தப்பட்ட 6 மாதக் குழந்தையை 36 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர்.

Updated On : 22 ஜூன் 2022, 12:23 pm IST
மீட்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோருடன் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் மற்றும் தனிப்படையினர்.
பகிர்:

அம்பாசமுத்திரம்: பாப்பாக்குடியில் விற்பனைக்காக கடத்தப்பட்ட 6 மாதக் குழந்தையை 36 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாப்பாக்குடி வேத கோயில் தெருவைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் மற்றும் இசக்கியம்மாள். கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜூன் 20-ம் தேதி திங்கள்கிழமை அன்று குழந்தை காணவில்லை என்று பாப்பாக்குடி காவல் நிலையத்தில் இசக்கியம்மாள் புகாரளித்தார். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை செய்து 36 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.

இது குறித்து அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறியது:

Advertisement

Advertisement

ஜூன் 20-ம் தேதி குழந்தை காணவில்லை என்று இசக்கியம்மாள் புகாரளித்ததையடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் எனது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்றது. மேலும் கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் செல்பேசி உதவியுடன் புகாரளித்த 36 மணி நேரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது.

இதையடுத்து குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டதாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஆலங்குளத்தைச் சேர்ந்த கணபதி மகன் கார்த்திகேயன் (34), கீழப்பாப்பாக்குடி பள்ளிக்கூடத்தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி கனியம்மாள் (57), ஜெகன் மனைவி முத்து செல்வி (30) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை நன்கு அறிமுகமானவர்களிடம் கொடுத்தாலும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments