FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அம்பை, வி.கே.புரத்தில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்: 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது

மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள் சார்பில் திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

Updated On : 28 மார்ச் 2022, 1:13 pm IST
அம்பாசமுத்திரத்தில் சாலைமறியலில் ஈடுபட்டவர்கள்.
பகிர்:

அம்பாசமுத்திரம்: மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள் சார்பில் திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்தல், தொழிலாளர் சட்டத்தொகுப்பை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிடுதல், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிபடுத்துதல், விவசாயம், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய துறைகளில் பொது முதலீட்டை அதிகப்படுத்துதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எம்.எல்.எப்., டி.டி.எஸ்.எப்., ஐ.என்.டி.யு.எல்., எச்.எம்.எஸ் மற்றும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

அம்பாசமுத்திரம் பூக்கடை சந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் எல்.பி.எப். மாஞ்சோலை மைக்கேல், மதிவாணன், சோமசுந்தரம், செல்வன், சி.ஐ.டி.யு. வண்ணமுத்து, சுரேஷ், ராஜன், ஜெகதீஷ், ராமச்சந்திரன், நாகையன், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஞானம்மாள், கிருஷ்ணவேணி, இளஞ்செல்வி, ஓமணா, ஏ.ஐ.டி.யு.சி. ராமகிருஷ்ணன், வடிவேல், தர்மலிங்கம், எம்.எல்.எப். கிருஷ்ணன், குருசாமி, டி.டி.எஸ்.எப். பேச்சிமுத்து, ஐயப்பன், முத்துகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. சங்கர்ராஜ், தங்கராஜ் பிரீஸ், டேவிட் குமார், எச்.எம்.எஸ். பாலசுப்பிரமணியன், ஞானசெல்வம், பூபதி மற்றும் மின்வாரியம், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்பட சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 147 பெண்கள் உள்பட 248 பேரை அம்பாசமுத்திரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

விக்கிரமசிங்கபுரத்தில் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 70 பேரை விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments