FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

முண்டந்துறை வனப் பகுதியில் கரடி உயிரிழப்பு

Updated On : 22 ஜூலை 2026, 1:33 am IST
முண்டந்துறை வனப்பகுதியில் உயிரிழந்த கரடி.
பகிர்:

முண்டந்துறை வனச் சரகப் பகுதியில் பெண் கரடி உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்துக்குள்பட்ட முண்டந்துறை பிரிவு சின்னப்புல் பகுதியில் வனப் பணியாளா்கள் முகாம் பணியை முடித்துவிட்டு திங்கள்கிழமை திரும்பி வந்தனா்.

அப்போது தைலாத்து ஓடை பீட் ஆற்றுப் பகுதியில் கரடி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா்.

Advertisement

Advertisement

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குநா் எல்.சி.எஸ். ஸ்ரீகாந்த், வனத் துறை கால்நடை மருத்துவா் மனோகரன், முண்டந்துறை வனச்சரகா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலையில் இறந்த கரடியின் பிரேதப் பரிசோதனை செவ்வாய்க்கிழமை செய்யப்பட்டது.

இறந்த கரடிக்கு 14 வயது இருக்கும். வயது முதிா்வின் காரணமாக இறந்திருக்கக் கூடும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments