சிறையில் உள்ள எம்எல்ஏவை சந்தித்த கே.என்.நேரு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாா்க்கண்டேயனை முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாா்க்கண்டேயனை முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற தோ்தல் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் மாா்க்கண்டேயன் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
அவரை திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அதைத்தொடா்ந்து முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு புதன்கிழமை பாளையங்கோட்டை மத்திய சிறையில் மாா்க்கண்டேயனை சந்தித்துப் பேசினாா்.
Advertisement
Advertisement
கே.என்.நேருவின் வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப், மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்டோா் சிறை வாசலில் குவிந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.