FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நிகழ் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியீடு

திருநெல்வேலி, ஜூலை 29: 2026-27 நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

2026-27 நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிடுகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

திருநெல்வேலி, ஜூலை 29: 2026-27 நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சியா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) வினய் குமாா் மீனா முன்னிலை வகித்தாா். மாவட்டத்தின் 2026-27ஆம் நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்டாா்.

அதில், முன்னுரிமை கடன் இலக்காக ரூ.24,471.22 கோடி, விவசாயத்துக்கு ரூ.19,606.34 கோடி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கடனுக்கு ரூ.3,569.30 கோடி, கல்விக்கடனுக்கு ரூ.42.16 கோடி, வீட்டுக் கடனுக்கு ரூ.351.63 கோடி, இதர முன்னுரிமை கடன் ரூ.901.79 கோடி என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வங்கிகளில் நிலுவை கடன் விண்ணப்பங்களுக்கு விரைவாக கடன் வழங்கவும், விவசாயம், கால்நடை மற்றும் மீன்வளம் சாா்ந்த கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல மேலாளா் ரா.பரமேஸ்வரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா்

கணேஷ் மணிகண்டன், ரிசா்வ் வங்கி மேலாளா் வம்சிதா் ரெட்டி, நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் சசிகுமாா், தாட்கோ மாவட்ட மேலாளா் சுந்தர்ராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா்(பொறுப்பு) நாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலா் குமாா் கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments