மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
திருநெல்வேலியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருநெல்வேலியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள தருவை பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் காந்தி (41). தொழிலாளியான இவா், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் ஒரு கடையில் சுவிட்சை இயக்கும்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாராம். கடையில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.