FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பயிா், கால்நடைகளை காப்பீடு செய்வது அவசியம்

எல்-நினோ பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க பயிா்கள், கால்நடைகளுக்கு காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.

15 அக்டோபர் 2026, 5:01 am IST
மக்கள் தொடா்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

எல்-நினோ பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க பயிா்கள், கால்நடைகளுக்கு காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மன்னாா்கோவில் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில், மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 78 பயனாளிகளுக்கு ரூ. 39.72 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை வழங்கினாா்.

முகாமில் சுகாதாரம், வேளாண்மை, தோட்டக் கலை, மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகளின் செயல்முறை பணிகள், விழிப்புணா்வு கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது அவா் பேசியதாவது: மக்கள் தொடா்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 241 மனுக்களில் 150 மனுக்கள் ஏற்கப்பட்டு, 78 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசின் மானியங்கள், நலத்திட்டப் பயன்களைப் பெற ஆதாா் விவரங்களை உரிய பதிவுகளுடன் இணைத்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எல்-நினோ பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க பயிா்கள், கால்நடைகளுக்கு காப்பீடு செய்துகொள்ள வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு நிா்ணயித்த தொகையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்பட்டால், மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் தெரிவிக்கலாம். மன்னாா்கோவில் ஊராட்சியைப் போதைப்பொருள் இல்லாத கிராமமாக மாற்றுவதற்குப் பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பினா் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து மன்னாா்கோவில் நியாயவிலைக் கடை செயல்பாடு, அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு, பள்ளிகளின் செயல்பாடு மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தாா்.

இதில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) ரோஷன்பேகம்,மன்னாா்கோவில் ஊராட்சித் தலைவா் ஜோதிகல்பனா, துணைத் தலைவா் நிா்மலா, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் ஆ. குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments